Skip to main content

நரிக்குறவர் மக்களுக்கு 4 ஆண்டுகளாக நூறு நாள்  வேலை கொடுத்ததாக முறைகேடு புகார்!

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

காட்டுமன்னார்கோயில் வட்டம் குமாரகுடியில் நரிக்குறவர்கள் 40 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு  நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான வேலை உறுதிக்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாகியும் இதுநாள் வரை வேலை அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. வேலை கொடுத்தது போல் கணக்கெழுதி பணம் எடுக்கப்பட்டுள்ளதா? இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 100 நாள் வேலை கேட்டும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனார். 

 

pp


சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ், கீரைப்பாளையம் ஒன்றிய செயலாளர் நெடுஞ்சேரதாலன், புவனகிரி ஒன்றிய செயலாளர் மணி, நரிகுறவர் பகுதி கிளைசெயலாளர் ராஜி, அப்பகுதியில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட மக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கோரிக்கை குறித்து மனு கொடுத்தனர். 

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் வரும் வாரத்தில் இருந்து இவர்களுக்கு வேலை கொடுக்கப்படும் என்றும், நான்கு ஆண்டுகளாக ஏன் வேலைகொடுக்கவில்லை. அதில் முறைகேடு நடந்து இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்படும் என உறுதியளித்தனர். அதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

சார்ந்த செய்திகள்