




















எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர இன்று நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற இருக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில் 1:30 மணிக்குள் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடக்கும் தேர்வை சுமார் 18.72 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ் மொழியில் 31,803 பேர் என தமிழகத்திலிருந்து மொத்தம் 1,42,286 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். நாடு முழுவதும் 497 நகரங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வை மொத்தமாக 18.72 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். அதில் 10, 64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர்கள்.
இந்நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஆசான் மெமோரியல் பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் தேர்வு மையத்திற்குள் செல்ல தயாராகி வருகின்றனர்.