மதுரை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி பாச பிரபு திருமங்கலத்தைச் சேர்ந்த என்னுடன் நெருங்கிப்பழகி திமுகவில் பதவி வாங்கித் தருவதாக சொல்லி தன்னை பலமுறை ஏமாற்றி உள்ளார். அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினேன் தற்போது குடித்துவிட்டு வந்து என்னிடம் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்.மேலும் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்து என் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன் என்னை காப்பாற்றுங்கள் என்று அழுது கொண்டே வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அந்த இளம்பெண்.
அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, என் பெயர் சுகன்யா திருமங்கலத்தில் இருக்கிறேன். என்னுடைய பெரியப்பா தனுஷ்கோடி பிரசிடென்டாக இருக்கிறார். நான் தேனியில் திருமணம் முடித்தேன். எனக்கும் என்னுடைய கணவருக்கும் சண்டை ஏற்பட்டு டிவர்ஸ் வரை சென்றது. அப்போது திமுகவின் ஐடி விங் கோஆர்டினேட்டர் பிரபுவுடன் நட்பு ஏற்ப்பட்டது. எனக்கு திமுகவில் பதவி வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார். இதுபற்றி கேட்டால் நாம் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் போட்டுடுவேன் என மிரட்டினார். அதேபோல் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டார். இதனால் எனது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு என் தம்பியும், பெரியப்பாவும் என்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். எனக்கு என்ன நேர்ந்தாலும் முழு காரணம் பிரபுதான் என கூறினார்.
இதுகுறித்து மதுரை திமுக ஐடி விங் கோ-ஆர்டினேட்டர் பிரபுவை தொடர்புகொண்டு பேசியபோது, நானும் அவரும் நல்ல நட்பில் இருந்தோம், செல்பி எடுத்தோம் யாரோ ஒருத்தன் படத்தை ஃபேஸ்புக்கில்போட்டுவிட்டான். இதனால் அந்த பெண்ணுடைய தம்பியும் பெரியப்பாவும் அவரை அடித்து விட்டார்கள். அவரை அடித்தவுடன் அவர் ஹாஸ்பிடலில் போய் சேர்ந்து விட்டார். இந்தநிலையில் என்னை பிடிக்காதவர்கள்இரண்டு மூன்று பேர் போன் பண்ணி என்னைப்பற்றி தவறாக அவரிடம் கூறியுள்ளனர். அதன்பிறகு அந்த பொண்ணு தற்பொழுது இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. தீபாவளி அன்று மதியம் சென்று பார்த்த பொழுது எனக்கு இந்த வீடியோ வெளியானது எல்லாம் தெரியாது. அப்போது கேட்டதற்கு என்னை என் தம்பி பெரியப்பாவுடன் சேர்த்து வையுங்கள் என்றார். நானும் எங்களுக்குள் ஏதும் தப்பான உறவு எதுவுமில்லை செல்பி எடுத்தது வெறும் நட்புதான் என்று கூறியவுடன் அவர்கள் அந்த பெண்ணை ஏற்றுக்கொண்டார்கள். அந்த பிரச்சினை அதோடு முடிந்துவிட்டது என்றார்.