Published on 08/11/2018 | Edited on 08/11/2018
பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகயை எதிர்த்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது.
பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட தேனி ராகவி, சேலம் ராஜலெட்சுமி ஆகியோரின் வழக்குகள் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். பெண் காவல் அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு உச்சபட்சத் தண்டனையாக மரண தண்டனை வழங்கி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.