Published on 28/09/2019 | Edited on 28/09/2019
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக த்தில் உடற்கல்வி துறையில் பயிலும் மாணவி மீது கடந்த 9-ந்தேதி உடன் கல்வி பயின்ற மாணவன் முத்தமிழன் (23) காதல் பிரச்சனை தொடர்பாக மாணவி மீது ஆசிட் வீசியது தொடர்பாக அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்தநிலையில் மாணவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

இவரின் இத்தகைய கொடுங்செயலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டார். மாணவர் கடலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டார்.