நாங்குநேரி இடைத்தேர்தல் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஆளும் ஆட்சி அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க.வின் கூட்டணியான காங்கிரஸ் ரூபி மனோகரனை களமிறக்கியுள்ளது.
இந்நேரத்தில் தேர்தல் பணிக்கென்று தி.மு.க. தனது கூட்டணிக்காக டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.லட்சுமணன் கனிமொழி, தனுஷ்குமார், ஞானதிரவியம் உள்ளிட்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆவுடையப்பன் வகாப் என்று 23 மா.செ.க்கள் கருப்பசாமிபாண்டியன் உள்ளிட்ட தேர்தல் ஜாம்பவான்களை கழக அமைப்புச் செ.வான ஐ.பெரியசாமியின் பொறுப்பில் பெரியபடை இறக்கப்பட்டுள்ளது அதற்கும் சளைக்காமல் தோள் கொடுக்கும் வகையில் காங்கிரசும் எம்.பி். எம்.எல்.ஏ.க்கள், பீட்டர் அல்போன்ஸ், செல்வகுமார் என்று பிரபலங்களை பணிக்கென்று நியமித்துள்ளது.
அதே சமயம் சளைக்காத அ.தி.மு.கவும் அமைச்சர் தங்கமணியைத் தலைமையாகக் கொண்டு அமைச்சர் கடம்பூர் ராஜ், ராஜலெட்சுமி என்று எம்.எல்.ஏக்கள் 27 மா.செ.க்கள் என்று பெரிய டீமை அனுப்பியுள்ளது.
விவசாயம், தொழில் வளர்ச்சி குன்றிய நான்குநேரி தொகுதியில் மூன்று பெரிய சேனைகளும் தங்குவதற்கான இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது அமைச்சர்கள் அ.திமு.க முக்கியப்புள்ளிகள் 40 கி.மீ தொலைவிலுள்ள பாளையில் தங்க உள்ளனர். ஆனால் இந்த மூன்று கட்சிகளின் 2ம், மற்றும் 3ம் கட்ட புள்ளிகள் தொகுதியிலேயே தங்கிப் பணியை மேற்கொள்ளுகிற சூழல் என்பதால், ஒரியண்ட் ஏரியாவான நாங்குநேரியில் வாடகை வீடுகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏர்வாடி, நாங்குநேரி, களக்காடு, திருக்குறுங்குடி போன்ற பகுதிகளின் காலி வீடுகளுக்கு இதனால் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வாடகை, அட்வான்ஸ் தொகைக்கு ஆட்சேபமில்லாத நிலையில் மூன்று வாரம் மட்டுமே என்பதால் அரசியல் வாடகை விண்ணுக்குப் போய்விட்டன.
குறிப்பாக ஏர்வாடி, நாங்குநேரி, ஒதுக்குப்புறங்களிலுள்ள 200 ரூபாய் வாடகை்குத் தகுதியில்லாத வீட்டிற்கு கூட இரண்டாயிரம் வாடகை ஐம்பாதயிரம் அட்வான்ஸ் மொத்தத் தொகை வந்தால் தான் கையில் சாவி, என்ற நிலை உருவாகியுள்ளது. இதில் இலைத் தரப்பு தான் முன்னிலையில் உள்ளதாம்.
குறுகிய காலம். வீடு கிடைத்தால் போதும் என்று வருகிறார்கள். பேரம் பேச வில்லை. வந்தவரை நல்லது தானே என்ற பேச்சுக்கள் கிசு கிசுக்கப்படுகின்றன. அரசியல் அதிசயம் என்கிறார்கள் திருக்குறுங்குடி மக்கள் .