சென்னை சிந்தாதிரிபேட்டை ரிச்சி தெருவில் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல்.
சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த பெண் வழக்கறிஞர், எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இன்று மதியம் 01.00 மணியளவில் எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் சிந்தாதிரிபேட்டை அருகே ரிச்சி தெருவை கடக்க முயன்ற போது, ஆறு பேர் கொண்ட ரவுடி கும்பல், ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டு வீசியுது. அதில் நிலைகுலைந்து போன பெண்ணை அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றுள்ளன. பெண்ணின் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் வந்ததால், ரவுடிகள் தப்பித்து சென்றன. இதனையடுத்து பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த பெண் ரவுடி கோட்டம் சேகரின் 3- வது மனைவி ஆவர். பெண்ணை கொல்ல முயன்று தப்பிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றன. சீன அதிபரின் வருகையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பட்டப்பகலில் கொலை முயற்சி நடந்திருப்பது. மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சென்னை விமான நிலையம், ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.