பாரத பிரதமாின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடப்பது வண்மையாகக் கண்டிக்கதக்கது என்றும் இந்த ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது மாநில அரசு தண்டணை வழங்கவேண்டும் என்றும் பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர்வினோஜ் செல்வம் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பா.ஜ.க புதிய இளைஞரணி நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம், மாநிலச் செயலாளர் தங்க.வரதராஜன் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளார்களைச் சந்தித்த மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம், "ஒரு குழந்தை இரண்டு மொழி படிக்க வேண்டுமா மூன்று மொழி படிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யவேண்டியது பெற்றோர்களே தவிர திராவிட முன்னேற்றக் கழகம் கிடையாது. ஏழை மாணவர்கள் படிக்கக் கூடிய மாநகராட்சி, நகராட்சி, கிராமப்புற பள்ளிகளில் இரண்டு மொழி கற்கவேண்டும் என்கிற போலித்தன்மையை மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக மும்மொழி முக்கியத்துவத்தினை வலியுறுத்தி பெரிய யாத்திரை செல்வதற்கு முடிவு செய்யபட்டுள்ளது.
ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் நிதிஉதவி வழங்கும் திட்டத்தில் 46 லட்சம் விவசாயிகள் தமிழகத்தில் பயன்பெற்று வருகிறார்கள். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு 5 லட்சம்கோடி முறைகேடு தமிழகத்தில் இருப்பது மிகவும் அதிர்ச்சிகரமான விசயமாக இருக்கிறது. பாரத பிரதமர் ஏழை விவசாயிகளுக்கு செய்து தரக்கூடிய நலத்திட்டங்களில் ஏமற்ற நினைப்பது மிக மிகக் கண்டிக்கதக்கது .
அதேபோல பாரத பிரதமாின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு நடப்பது வன்மையாகக் கண்டிக்கதக்கது. இந்த ஊழலில் ஈடுபடுபவர்கள் யாரக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்து தண்டணை வழங்கவேண்டும். வருகின்ற தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்றால் கூட 60 இடங்களில் வெற்றி பெரும்," என்றார்.