திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் அருகே இருக்கும் சத்திரப்பட்டியில் மதிமுக மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி இல்ல திறப்புவிழா நடந்தது.
இந்த இல்ல திறப்பு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசும்போது...
தமிழத்தின் ஒவ்வொரு பகுதியும் அனைத்து மக்களுக்கு சொந்தமானது. இன்று பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி நான் குஜராத்தில் ஒற்றுமை கூட்டத்தில் பேசிய போது எனது பேச்சை குஜராத்தில் மொழிபெயர்த்தவர் கடந்த 2014ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று மோடி பிரதமராக பதவி ஏற்றார். அப்போது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததால் மோடிக்கு எதிராக அன்று கருப்புக்கொடி காட்டினோம். இன்று அவரது ஆட்சி முடியும் சமயத்தில் மதுரையில் கருப்புக் கொடி காட்ட இருக்கிறோம்.
மேலும் அமிர்ஷா ராஜபக்சவை சந்தித்து மன்னிக்க முடியாத குற்றம் என எடுத்துரைத்தேன். வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றும். அதுபோல் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக மு க ஸ்டாலின் உருவெடுப்பார். தமிழகத்தில் தேனி மாவட்டத்தை அழிக்க நியூட்ரினோ திட்டமும்,டெல்டா மாவட்டத்தின் நீராதாரத்தை பாதிக்க ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதற்கு கூடிய விரைவில் முடிவு கட்டப்படும் என்று கூறினார்.
இதில் ஒட்டன்சத்திரம் திமுக சட்டமன்ற உறுப்பினருமானரும்.கொரடாவுமான சக்கரபாணி கலந்துகொண்டார் அதுபோல் மாவட்டத்திலுள்ள மதிமுக நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் இந்த இல்லத் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.