Skip to main content

ஸ்டாலின், வீரமணி கொடும்பாவி எரிப்பு புதிய தமிழகம் கட்சியினர் கைது

Published on 09/09/2017 | Edited on 09/09/2017
ஸ்டாலின், வீரமணி கொடும்பாவி எரிப்பு
புதிய தமிழகம் கட்சியினர் கைது



’’நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் இன்று காலை சுமார் 11.30 மணியளவில் புதிய தமிழகம் கட்சியினர் அதன் நெல்லை வடக்கு மாவட்டச் செயலாளர் இன்பராஜ் தலைமையில் அசெம்ப்ளி லாட்ஜ் முன்னிலையில் கூடினர். திடீரென்று அவர்கள் தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், மற்றும் டவுண் எஸ்.ஐ.கமலாதேவி ஆகியோர் கொடும்பாவி எரிப்பிற்குக் காரணமான புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த இன்பராஜ் உட்பட சுமார் 30 பேரைக் கைது செய்து பரக்கத் மஹாலில் தங்கவைத்தனர்.’’

அரியலூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கொடும்பாவியை தி.மு.க.வினர் எரித்ததற்காகவும், அதே போன்று கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமியின் கொடும்பாவியைத் தி.க.வினர் எரித்ததற்காக இங்கே ஸ்டாலின், வீரமணி போன்றவர்களின் கொடும்பாவியை எரித்தோம். என்கிறார் கைது செய்யப்பட்ட பு.த. வ.மா.செ.வான இன்பராஜ்.
 
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்a

சார்ந்த செய்திகள்