ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தின் மீது ஏறி
மாணவர்கள் தற்கொலை மிரட்டல்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் மாணவ சங்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
தமிழக அரசின் முத்திரை சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் கோபுரத்தின் மீது ஏறி நின்று, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக, 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதாதைகள் எந்தி கோஷமிட்டதைக் கண்ட காவல்துறையியினர், அவர்களை கீழே இறக்குவதற்கு முயன்றனர். இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் கீழே குதிக்க ஆயத்தமாயினர். அதனைத் தடுத்து நிறுத்தும் விதமாக, காவல்துறையினர் சமாதானமாகப் பேசி, மாணவர்களைக் கீழே இறக்கினர். பிறகு, போராடிய மாணவர்களைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
-சி.என்.இராமகிருஷ்ணன்