
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் (வயது 63) நுரையீரல் தொற்று காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (11.04.2021) காலை அவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், உயிரிழந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.