அகில இந்திய அளவில் மோட்டார் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளதோடு வருகிற 20.7.18 முதல் இந்தியா முழுக்க கால வரையற்ற லாரி ஸ்டைக் நடைபெறும் என போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.
இது பற்றி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக இன்று கூறுகையில், டீசல் விலை ஏற்றம்... காப்பீடு தொகை உயர்வு .... கங்க சாவடி வசூல் அதிகரிப்பு ... என நாளுக்கு நாள் விலையேற்றம் மத்திய பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. இதனால் லாரி தொழில் சீராக செய்ய முடியவில்லை. கடுமையான விலை ஏற்றத்தால் வாடகையை கூட்ட வேண்டியுள்ளது. இது நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு தொழில் நடைபெற வேண்டுமென்றால் நம்பக தன்மை வேண்டும் இந்த லாரி தொழிலில் தினம் ஒரு வாடகை ஏற்ற முடியாது மத்திய மோடி அரசு இதை புரிந்து கொள்ள வில்லை. டீசல் விலை குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு கட்டுக்குள் இருக்க வேண்டும் அதே போல் சுங்க சாவடி கட்டணம் அவ்வப்போது ஏற்றப்படுகிதது. இதனால் பொருளதார சிரமங்களை அரசு ஏற்படுத்துகிறது. ஆகவே மத்திய பா.ஜ.க. மோடி அரசு மோட்டார் வாகன தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதோடு இந்தியா முழுக்க லாரி தொழில் காப்பற்ற பட வேண்டும் இதில் ஈடுபட்டுள்ள சுமார் 30 லட்சம் குடும்பங்களின் வாழ்வியல் சூழலை இந்த அரசு தெரிந்து கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள்.
மேலும் அவர்கள் இந்த லாரி ஸ்டைக்கால் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுவதோடு விலைவாசி கடுமையாக உயரும் என்கிறார்கள். குறிப்பாக காய்கறி, கேஸ் சிலின்டர் விலை கூட உள்ளது. தமிழ்நாட்டில் '4 லட்சம் லாரிகள் இயங்காது என்றும் வருகிற 15ந் தேதி யுடன் சரக்கு புக்கிங் நிறுத்தப் படும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று நாமக்கல்லில் அறிவித்துள்ளது.’