Skip to main content

 “கோர்ட்.. கவர்மெண்ட்டால் முடியாது! ஆன்மிகவாதிகளால் முடியும்!” -‘வாவ்’ வாழும்கலை ரவிசங்கர்!  

Published on 17/01/2019 | Edited on 17/01/2019
r

 

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு இன்று வந்தார். சாமி தரிசனத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். சபரிமலைக்குப் பெண்கள் செல்வது,  அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது,  பா.ஜ.க. ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். தலையீடு என்பது போன்ற விவகாரமான கேள்விகளை எதிர்கொண்டு, அவர் முன்வைத்த கருத்துக்கள் இதோ - 

“அதுவந்து பரம்பரையா வச்சிக்கிட்டிருக்கிற வழக்கத்தை காப்பாத்திட்டு வரணும். அதுவந்து புரட்சிக்கான இடம் இல்ல. ஆன்மிக இடம். பக்தர்கள் யாரும் அங்கே போகணும்னு நினைக்கல. அதிகாரமா.. பக்தர்கள் இல்லாத பெண்கள் அங்கே சாதிக்கணும்னு போறாங்க. அதனால.. நிறைய பேருக்கு மனசுல துன்பம் உண்டாயிருக்கு. யாரு மனசயும் துன்பப்படுத்தக் கூடாது. நிச்சயமா சுப்ரீம் கோர்ட் இதை கவனத்துல வச்சிக்கிட்டு பண்ணுவாங்க. அப்பீல் வந்து அக்செப்ட் பண்ணுவாங்கன்னு எனக்குத் தோணுது. 

 

r

 

பெண்களுக்கு நிஜமாவே பக்தி இருந்ததுன்னா அந்த இடத்துல என்ன கலாச்சாரம் இருக்கோ.. அதைக் காப்பாத்திட்டு வாங்கன்னு அவங்களுக்குச் சொல்லுவேன். இப்ப பாருங்க. சர்ச்ல எல்லாம் ஆண்கள்தான் பாதிரியாரா இருக்காங்க. அங்கே போயி.. நான் லேடி பிஷப் ஆவேன்னு வைக்க முடியுமா? ஆனா.. அது யாரு பண்ண முடியும்? கோர்ட்டோ, கவர்மென்டோ பண்ண முடியாது. ஆன்மிகவாதிகள்தான் பண்ண முடியும். 
அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை பேச்சுவார்த்தைகளால்தான் முடியும்னு நான் நினைக்கிறேன். ரெண்டு சமுதாயமும் சேர்ந்து, ஒற்றுமையா ராமர் கோவில் கட்டணும்கிறதுதான் என்னோட கொள்கை. அப்படியாகும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. 

 

வரக்கூடிய அரசு பார்க்கலாம். இன்னும் நாலு மாசம் இருக்கே..  அஞ்சுமாசம் இருக்கே.. அப்ப பார்க்கலாம். நாட்டுல சில நல்லது நடந்திருக்கு. இன்னும் நடக்க வேண்டியது நெறய இருக்கு. இன்னும் முழுதுமா முடியல. 

 

ராமர் கோயில் விவகாரத்தை முன்னிறுத்தி பா.ஜ.க. அரசியல் செய்கிறதா?  இந்தக் கேள்வியை  நீங்க அவங்ககிட்டதான் கேட்கணும்.” என்று சிரித்தார் ரவிசங்கர். 
 

 

சார்ந்த செய்திகள்