Skip to main content

"போலீசார் பொய் வழக்கு போடுகிறார்கள்"- எஸ்.பி.யிடம் ஓட்டுனர்கள் நேரில் மனு ..

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஓட்டுனர்கள் இன்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பரிண்டன்ட் சக்திகணேசனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். பிறகு அவர்கள் வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் பேசினார் "ஈரோடு மாவட்டத்தில் 550 தனியார் பஸ்கள், 175 மினி பஸ்கள், 2 ஆயிரத்து 390 ஆட்டோக்கள், 5 ஆயிரத்து 500 சுற்றுலா வாகனங்கள், 20 ஆயிரத்து 500 சரக்கு வாகனங்கள், 13 ஆயிரத்து 200 கனரக சரக்கு வாகனங்கள், 3 ஆயிரம் டிராக்டர்கள் என 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
 

owners association gives petition


இந்த வாகனங்களை சொந்தமாக, பெரும்பாலான டிரைவர்கள் சுயதொழிலாக சிறிய அளவில் முதலீடு செய்து வங்கிக்கடன் மூலமாக தொழில் நடத்தி வருகின்றனர். இதில் எங்களுக்கு பெரிதும் துன்பத்தை கொடுப்பது வாகன தணிக்கையின்போது போலீசார் உரிய ஆவணங்கள் இருந்தாலும், பொய் வழக்குப்பதிவு செய்து ஆயிரக்கனக்கில் அபராதம் விதிக்கின்றனர். இது எங்களுக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்துகிறது.

போலீசாரின் வாகன தணிக்கையின்போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் பயணிகள் இருந்தாலும், கூடுதல் பயணிகள் இருந்ததைபோலவும், சரக்கு வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவு சரக்குகள் ஏற்றப்பட்டு இருந்தாலும் கூடுதல் சரக்குகள் ஏற்றப்பட்டு இருப்பதைபோலவும் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கிறார்கள்.


இதேபோல் மெதுவாக சென்றாலும், அதிக வேகமாக வாகனங்களை இயக்குவதாக கூறி போலீசார் அபராதம் வசூலிக்கிறார்கள். மேலும், வாகனத்தின் உரிய ஆவணங்களின் நகல்கள் இருந்தாலும், அசல் ஆவணங்களை எடுத்து வர காலஅவகாசம் கொடுக்கப்படாமல் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதன் காரணமாக டிரைவர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே வாகன சோதனையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி.யிடம் கூறினோம்" என்றனர்.

 

சார்ந்த செய்திகள்