Published on 21/04/2022 | Edited on 21/04/2022
ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. அதுசமயம் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தகாலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதன் பின்னர் காலை 9.45 மணியளவில் மிதுன லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. இந்நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.