
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறி கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்தும் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு திங்கள்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிதம்பரம் அருகே கடற்கரையோர கிராமமான காடுவெட்டி, சின்ன காரமேடு, பெரிய காரமேடு, கீழப்பெறம்பை, தெற்கு பிசாவரம், பரங்கிப்பேட்டை, இளந்திரமேடு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர்ந்து கனமழை பெய்தால் தினக்கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதனை அறிந்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் விதமாக நடராஜர் கோவில் பாஸ்கர் தீட்சிதர் தலைமையில் சிவசிதம்பரம் தொண்டு அறக்கட்டளை சார்பில் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சபாபதி, ஞானமூர்த்தி, சிவபிரசாத், பாபு, சிவ சண்முகம் உள்ளிட்டவர் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு உணவுகளை வழங்கினார்கள்.