Skip to main content

திருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராக இருசக்கர வாகனத்தில் பேரணி!

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
திருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராக இருசக்கர வாகனத்தில் பேரணி!



திருச்சி மாவட்டம் துறையூரில் அரியலூர் அனித்தாவின் மரணத்திற்க்கு காரணமான நீட் தேர்வை எதிர்த்து இருசக்கர வாகனத்தில் பேரணி.

துறையூர் அரசு மருத்துவமனையில் இருந்து சிலோன் அலுவலகம், பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம், அன்னை  மருத்துமனை வழியாக பிரிவு ரோடு சென்று மீண்டும் பேருந்து நிலையம் வந்து தமிழக அரசு மற்றும் மத்திய மோடி அரசை கண்டித்து கோஷம் போட்டுக்கொண்டே நாம் தமிழர் கட்சி மற்றும் சமூகஆர்வலர்கள் ஆகியோர் ஊர்வலமாக டூவிலரில் சென்று தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.

- ஜெ.டி.ஆர்

சார்ந்த செய்திகள்