'நீட்' தேர்வுக்கு எதிராக கருத்து: ஊராட்சி செயலரை
கடுமையாக தாக்கிய பா.ஜ.கவினர்!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பட்டு கிரமாத்தை சேர்ந்தவர் ஜயப்பன், ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பாலாஜி 12ம் வகுப்பில் 1180 மதிப்பெண் பெற்றிருந்தார். நீட் தேர்வு எழுதிய இவர் கட் ஆப் மதிப்பெண் 182 பெற்றார். பிற்படுத்தப்ட்ட வகுப்பை (BC) சார்ந்த இவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. இதனால் ஐயப்பன் மனம் நொந்து காணப்பட்டார்.
இந்நிலையில் (5ம் தேதி) நேற்று செங்கம் நகரில் பா.ஜ.க ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு சென்ற ஐயப்பன் நீட் தேர்வுக்கு எதிராக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதில் கோபம் கொண்ட பாஜகவினர் ஐயப்பனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஐயப்பன் நம்மிடம் கூறியதாவது,
பா.ஜ.க ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு சென்ற நான் நீட் தேர்வு மக்களுக்கு எதிரானது, நீட் தேர்வை கொண்டு வந்த பா.ஜ.கவினரான உங்கள் பிள்ளைகளும் இதனால் பாதிக்கப்படுவார்கள். நீங்கள் இது பற்றி ஏன் உங்கள் ஆட்சி தலைமையில் முறையிடவில்லை என கேள்வி எழுப்பினேன்.
என் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத கூட்டத்தில் இருந்த பா.ஜ.கவினர் என்னை கொச்சையான வார்த்தைகளை பயண்படுத்தி பேசினர். அநாகரிகமாக திட்டினார்கள். என்னை மண்டபத்தை விட்டு வெளியே தள்ளினர். வெளியே விந்த என்னை நான்கு பா.ஜ.கவினர் குழுவாக வந்து தாக்க தொடங்கினர். அதில் முரளி என்பவர் மட்டும் பலமுறை என்னை பலமாக தாக்கினார். அதன் பின் காவல்துறையினர் வந்து என்னை அவர்களிடமிருந்து மீட்டனர் என நம்மிடம் கூறினார். பாஜகவினரால் தாக்கப்பட்ட ஐயப்பன் செங்கம் காவல்நிலையதந்தில் புகார் கூறியும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மிரட்டி அனுப்பியுள்ளனர்.
- ராஜா