Skip to main content

சுற்றுலா செல்லும் சிறப்பு குழந்தைகள்; ரோட்டரி கிளப் ஏற்பாடு!

Published on 04/08/2024 | Edited on 04/08/2024
Special children traveling; Organized Rotary Club

சென்னை ரோட்டரி கிளப் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்கென சிறப்பு ரயில் ஒன்றை ஏற்பாடு செய்து திருப்பதிக்கு அழைத்துச் செல்கிறார்கள். சிறப்பு குழந்தைகளுக்கு வெளியுலக அனுபவமும், ஆன்மீக பற்றுதலும் ஏற்படுவதற்காகத் திருப்பதிக்கு நாளை (05.08.2024) அழைத்துச் செல்கிறது சென்னை ரோட்டரி கிளப்.

இதற்கான நிகழ்வு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனில் உள்ள 11வது நடைமேடையில் நடக்கவிருக்கிறது. இதில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கொடி அசைத்துச் சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்பு ரயிலைத் துவக்கி வைக்கிறார்.

Special children traveling; Organized Rotary Club

இந்த சிறப்பு நிகழ்வில், ரோட்டரி கிளப் அமைப்பின் இயக்குநர் அனிருத்தராய் செளத்ரி, தென்னக ரயில்வேயின் சென்னை டிவிஷனின் டி.ஆர்.எம். விஸ்வநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

சார்ந்த செய்திகள்