Published on 25/09/2020 | Edited on 25/09/2020
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெறும் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் வந்துள்ளனர்.
மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள எஸ்.பி.பி.க்கு எக்மோ, உயிர் காக்கும் பிற கருவிகளுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் எம்.ஜி.எம். மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ வல்லுனர்களுடன் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் ஆலோசனை மேற்கொண்டார்.