Published on 01/12/2024 | Edited on 01/12/2024

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் உள்ள சில பெட்டிக் கடைகளில் விற்பனைக்காக குட்கா பொருட்களை பெரியநாயகி புரத்தைச் சேர்ந்த சுல்தான் மகன் பாரூக்(65), மொத்தமாக விற்பனை செய்வதாக வந்த புகார் வெளியானது.
புகாரைத் தொடர்ந்து வடகாடு போலீசார் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை புளிச்சங்காடு கைகாட்டியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் பாரூக் குட்கா பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் போது போலீசார் பாருக்கை பிடித்து அவரிடம் இருந்த 27 கி குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் நெடுவாசல் கிராமத்தில் ஒரு பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் மகன் முருகனையும் வடகாடு போலீசார் கைது செய்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.