![Sonia Gandhi inquired about the health of the Prime Minister!](http://image.nakkheeran.in/cdn/farfuture/am5ofrNIRUih4X65aSLALIUbcmEMTHDO4x7vhZu1W_A/1657878925/sites/default/files/inline-images/t23_6.jpg)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக முதல்வர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ''உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்' எனத் தெரிவித்திருந்தார்.
வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வருக்கு நேற்று ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலரும் அவர் உடல் நலம் பெற வேண்டும் தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த நிலையில், தற்பொழுது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.
'முதல்வர் தொடர்ந்து உடல்நலம் தேறி வருகிறார். மேலும் சில நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்க வேண்டும்' என காவேரி மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.