திருப்பூரை சேர்ந்த சிறுமி ஒருவர் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தனியாக நிற்பதை பார்த்து அவரை அழகி என நினைத்து தவறாக அணுகி பின்பு போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி சில மாதங்களுக்கு முன்பு இரயிலில் மதுரை வந்துள்ளார். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் என்ற இளைஞர் அந்த பெண்ணுடன் பேசி செல் போன் நம்பர் வாங்கியுள்ளார்.பிறகு அந்த இளைஞருடன் அந்த பெண் செல் போனில் அடிக்கடி பேசியுள்ளார். இது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இந்த விஷயம் அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அந்த பெண்ணை கண்டித்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர்க்கு விசயம் தெரிந்ததை அறிந்த சையது இப்ராகிம் அந்த சிறுமியை திண்டுக்கல் வருமாறு அழைத்துள்ளார். சையது இப்ராஹிம் கூறியதை நம்பி அந்த சிறுமியும் திண்டுக்கல் வந்துள்ளார். பின்பு அந்த சிறுமியை ஒரு தனியார் விடுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளான். பின்பு திருப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளான். மீண்டும் இவர்கள் காதலிப்பதை அறிந்த பெற்றோர்கள் சிறுமியை கண்டித்து அவர் வைத்திருந்த செல் போனை வாங்கி வைத்துள்ளனர். வீட்டில் கண்டித்ததை காதலுடன் சொல்லி கதறி அழுத்த அந்த சிறுமி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார். உடனே அந்த காதலன் சிறுமியை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்துள்ளார். பிறகு வீட்டில் சம்மதம் வாங்கி வருகிறேன் என்று கூறி அந்த சிறுமியை பஸ் ஸ்டாண்டில் நிற்க வைத்து விட்டு சென்றுவிட்டான். வெகு நேரமாகியும் சையது இப்ராஹிம் வரவில்லை.
மேலும் நள்ளிரவு என்பதால் தனியாக நின்ற சிறுமியை பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் அந்த சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். இதனால் கதறி அழுத சிறுமி தான் காதலனால் ஏமாற்றப்பட்டு நிற்பதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த இளைஞர்கள் அந்த சிறுமியை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த சிறுமியை அழைத்து வந்த இளைஞரின் செல்போனை வைத்து அவர் யார் என்ற விவரத்தை சேகரிக்கின்றனர். அந்த இளைஞர் சீக்கிரம் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவித்தனர்.