திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுக்கான உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 31வது வார்டுக்கு உட்பட திருமலை சாமிபுரத்தில் வசித்து வருபவர் அம்சா. இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர், தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச் சாவடிக்கு வருகை தந்தார். பின்னர் அவரால் நடந்து செல்ல இயலாது என்பதால், ஸ்டெக்சர் மூலம் வாக்குச் சாவடிக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவர் தெரிவித்த சின்னத்திற்கு தேர்தல் அதிகாரி வாக்களித்தார். இப்படி ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச்சாவடி வந்து ஓட்டுப் போட்டுவிட்டு சென்றது, அங்கிருந்தவர்களுக்கு மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.