![She is the first wife to file a complaint against actor Saravanan in the Chief Minister's special unit](http://image.nakkheeran.in/cdn/farfuture/Oam8kVgXw9iIU4_VJb25rEhi-2KPB7HQPZvXWE6Xv34/1683944933/sites/default/files/inline-images/nm746_0.jpg)
சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். இதில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் தொடர்பாக மனு அளித்தனர். அப்போது அங்கு வந்த நடிகர் சரவணன் தா.மோ.அன்பரசனிடம் புகார் மனுவை கொடுத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சரவணன், ''2014 ஆம் ஆண்டு லேக் வியூ அபார்ட்மெண்ட் செண்பகராமன் என்பவரிடம் இருந்து இரண்டு பிளாட் வாங்கினேன். இதை வாங்கிக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தவர் ராமமூர்த்தி என்ற புரோக்கர். அபார்ட்மெண்டுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் ராமமூர்த்தி கடையை கட்டி விட்டார். அதற்கு இபி வாங்கி விட்டேன் என்று சொல்கிறார். வரி கட்டி விட்டேன் என்று சொல்கிறார். அந்த கார் பார்க்கிங் என்னுடையது. ஆனால் அவருடையதாக ஏமாற்றுகிறார். நான் முதல் மனைவியிடம் பேசாமல் பிரிந்து இருந்ததை பயன்படுத்தி ராமமூர்த்தி இடத்தை ஆக்கிரமித்துள்ளார். அவரது மனைவி ஜெபமணி மற்றும் பத்திரப்பதிவு செய்து கொடுத்த இளவரசன் ஆகியோர் தன்னை ஏமாற்றியுள்ளனர்'' என்றார்.
![She is the first wife to file a complaint against actor Saravanan in the Chief Minister's special unit](http://image.nakkheeran.in/cdn/farfuture/xZcE5GP0yrPeSOsTE1b5Qla5-DnBX6E9GyC1afYj8TE/1683944952/sites/default/files/inline-images/nm783.jpg)
இந்தநிலையில் அமைச்சரின் உத்தரவை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இரண்டு கடைகளையும் போலீசார் பாதுகாப்புடன் திறந்து உள்ளே இருந்த பொருட்களை வெளியே கொண்டு வந்தனர். இதனைக் கண்டித்து புரோக்கர் ராமமூர்த்தி, அவரது மனைவி ஜெபமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடிகர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கடுமையாக திட்டினர். தொடர்ந்து நடிகர் சரவணனின் ஆதரவாளர்கள் கடைகளின் வெளியே இந்த கடை சரவணனுக்கு உரிமையானது என்று போஸ்டரை ஒட்டி விட்டு சென்றனர்.
![She is the first wife to file a complaint against actor Saravanan in the Chief Minister's special unit](http://image.nakkheeran.in/cdn/farfuture/zU1MaBATvb2t6ghtBUiKLcB4m1Gw62-eW41aPjWsSJI/1683944980/sites/default/files/inline-images/nm782.jpg)
இதையடுத்து புரோக்கர் ராமமூர்த்தி அவரது மனைவி ஜெபமணி ஆகியோர் சரவணனின் முதல் மனைவி சூர்யாஸ்ரீயை துணைக்கு அழைத்து சென்று முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யாஸ்ரீ பேசுகையில், ''அவர் சொல்வது எல்லாமே பொய்யா இருக்கு. எதுவும் உண்மை கிடையாது. என்னையும் ஏமாற்றி நிறைய பிரச்சனைகள் பண்ணிட்டு இருக்காரு. ஒரு லேடிய கொண்டு வந்து வச்சுக்கிட்டு இருக்கார். எனக்கு இன்னும் டைவர்ஸ் கொடுக்கல. எப்படி அவங்க இரண்டாவது மனைவி ஆவாங்க. பருத்திவீரனுக்கு முன்னாடி அவருக்கு ஒண்ணுமே இல்லை. பிச்சை எடுக்கும் ரேஞ்சில் இருக்கும் பொழுது நான் கஷ்டம் க்ளியரன்ஸ் ஏஜென்சியில் சம்பாதித்து அவருக்கு சோறு போட்டு எல்லாத்தையும் பண்ணினேன். இதை அவர்களே பேட்டியில் சொல்லி இருக்காங்க. பிக் பாஸில் கூட சொல்லி இருக்காங்க'' என்றார்.