தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் கரூர் பகுதியில் இது அதிகரித்து வரும் நிலையில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏவும், கரூர் திமுக மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும் போது, ’’கரூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு குழு கூட்டத்திற்கு எம். பி, எம் .எல். ஏக்களை கலெக்டர் அழைக்கவில்லை. சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு மூலம் கரூர் மாவட்டத்தில் குடிநீர் தேவைக்கு அதிக நிதி கேட்பேன்.
மக்களுக்கு இலவச செல்போன் தருவோம் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முதல்வரும் துணை முதல்வரும் இன்றுவரை நிறைவேற்றவில்லை. நடந்து முடிந்த எம்.பி. தேர்தலின் தோல்வியை மறைக்க எடப்பாடி பழனிசாமியும், ஒ.பி.எஸ் இருவரும் வேறு ஏதோ பேசி வருகிறார்கள்.
அரவக்குறிச்சி தொகுதியில் 25 ஆயிரம் மக்களுக்கு நிலம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்கிறார். 40 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்த அவரைப்பற்றி நான்கு காலில் சென்று முதல்வரான பழனிச்சாமிக்கு தெரியாது.
எம்.பி. தேர்தல் போல் வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று கடந்த தேர்தலின் போது கடும் பிரசாரம் மேற்கொண்டு உதயநிதிக்கு இளைஞர் அணி பதவி கொடுப்பதால் அதிமுக நிர்வாகியை கடுமையாக விமர்சிக்கின்றனர்’’ என்றார் செந்தில் பாலாஜி.