


Published on 07/06/2018 | Edited on 07/06/2018
நீட் தேர்வால் மருத்துவப் படிப்பு படிக்க முடியாமல் போனதால் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட பிரதிபாவின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெருவளூர் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தினார். பிரதிபாவை இழந்துவாடும் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.