இஸ்லாமியார்கள் தங்களுடைய வாழ்நாள் கனவாக வைத்திருப்பது புனித ஹஜ் பயணம். இந்த புனித பயணத்தை வாழ்க்கையில் ஒருமுறையேனும் சென்று விட வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்வார். அப்படி சேர்த்து வைத்திருந்த பணத்தையும் ஹஜ் பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று மோசடி செய்த சம்பவம் திருச்சியில் நடந்து உள்ளது.
திருச்சி உறையூர் கீரை கொல்லை பகுதியை சார்ந்தவர் அகமது பசீர் இவர் இஸ்லாமியர்களின் புனித பயணம் ஹஜ் பயணத்தை செல்ல முடிவு செய்தார்.
அதற்காக மேலும் தன்னுடன் 3 பேரை சேர்த்துக் கொண்டு டிராவல்ஸ் ஏஜென்சியிடம் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்தார். திருச்சி பீமநகர் பங்காளி தெருவில் டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் முகமது அனிபாவை சந்தித்துப் பேசினார். அவரும் அதற்காக அழைத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவதாக உறுதியளித்தார். இதற்காக கட்டணமாக அகமது பசீர் மற்றும் அவருடைய நண்பர்களிடம் மூன்று பேரும் சேர்ந்து 10 லட்சத்து 60 ஆயிரத்து ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக கொடுத்தனர்.
ஆனால் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான எந்தவித ஏற்பாடுகளில் செய்யாமல் டிராவல்ஸ் உரிமையாளர்கள் காலதாமதம் செய்துள்ளனர். குறிப்பிட்ட தேதியை தாண்டியும் இதற்கான ஏற்பாடுகள் செய்யாதால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்கள் பணத்தை திரும்ப கேட்டு கேட்டுள்ளனர் ஆனால் அவர் சரியான பதில் அளிக்கவில்லை முகமது அனிபா தங்களிடம் 10 லட்சத்து 60 ஆயிரத்து முதல் மோசடி செய்து விட்டதை அறிந்த அவர்கள் இன்னும் பேரதிர்ச்சி அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் அகமது பசீர் சார்பில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம் கிளை திருச்சி மாநகர போலீஸ் துணை ஆணையர் நிஷாவுக்கு முகமது ஹனிபா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை கோரி உத்தரவிட்டது அதன்பேரில் முகமது அனிபா மீது 10 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்து தொடர்பாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.