Published on 18/04/2020 | Edited on 18/04/2020
உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
![Sealed' for shop in cuddalore](http://image.nakkheeran.in/cdn/farfuture/enPM0mTbu0Ttd3A72Puahmi6NLupeejVj0dqSjQLmwk/1587226920/sites/default/files/inline-images/IMG-20200418-WA0024.jpg)
இந்நிலையில் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறியும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தொற்றுநோய் பரவுவதற்கு வழிவகுக்கும் வகையில், விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்த, பிரபலமான விஜய் ஹை ஸ்டைல் ஜவுளி கடை மற்றும் பிஸ்மி ஜவுளி கடையை வருவாய் வட்டாட்சியர் கவியரசு அதிரடியாக மூடி, சீல் வைத்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.