Published on 03/02/2021 | Edited on 03/02/2021

கடந்த ஜனவரி 16-ஆம் தேதிலியிலிருந்து கரோனா தடுப்பூசி தமிழகத்தில் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட நேற்று (02.02.2021) அனுமதியளிக்கப்பட்டிருந்தது. 150 சுகாதார பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 34 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் முன்களப்பணியாளர்கள் மட்டும் இலவசமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த்ராவ் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை தஞ்சை அரசு மருத்துவமணையிலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் போட்டுக்கொண்டனர்.