திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் நகரில் மட்டும் ஏப்ரல் 11ந்தேதி வரை கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 11 ஆகும். இவர்கள் அனைவருக்கும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வரப்படுகிறது.
![Seal to be set for Ambur ... ?? Come out to buy the essentials!](http://image.nakkheeran.in/cdn/farfuture/9c-grpvdUsk-WYT8_iuEjRxS1ErOGodlKMlKtHKBGKg/1586618653/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202020-04-11%20at%2013.21.05.jpeg)
மாவட்டத்திலேயே அதிக கரோனா நோயாளிகள் உள்ள பகுதியாக இது இருப்பதால், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 11ந்தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஏப்ரல் 13ந்தேதி முதல் ஆம்பூர் நகரம் முழுவதும் சீல் வைக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் உட்பட எது வாங்குவதற்கும் அனுமதியில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் வேண்டும் என்றால் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் தன்னார்வலர்கள் கொண்டு வந்து தந்துவிட்டு, பணம் பெற்று செல்வார்கள் எனச்சொல்லப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி யார் வெளியே வந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
a