Skip to main content

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தாளாளரின் மகன் கோவாவில் கைது

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

 Schoolgirls issue Accountant's son arrested in Goa

 

திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூர் லட்சுமி புரம் பகுதியில் உள்ளது ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தாளாளர் ஜெயராமன் என்பவரின் மகன் வினோத், பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம் கவுன்சிலிங் என்ற பெயரில் தனியாக அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளிடமும் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 23ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அதேபோல் மாணவர்களும் வினோத்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 Schoolgirls issue Accountant's son arrested in Goa

 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் மாணவர்கள் சென்னை-திருப்பதி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அதனைத் தொடர்ந்து விஷயம் பூதாகரமான நிலையில் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் ராமன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதன்பிறகு பள்ளி தாளாளர் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பட்டாபிராம் காவல்நிலைய உதவி ஆணையர் சதாசிவம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து காவல்துறையால் தேடப்பட்டு வந்த பள்ளி தாளாளரின் மகன் வினோத்குமார் தலைமறைவாக இருந்த நிலையில், கோவாவில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வினோத்  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்