Published on 14/06/2022 | Edited on 14/06/2022

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முழுப் பாடத்திட்டத்தையும் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா காரணமாக, கடந்த இரண்டு கல்வியாண்டுகளாக பள்ளிப்பாடத் திட்டம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. இந்த கல்வியாண்டில் வழக்கம்போல ஜூன் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், முழுப் பாடப்பகுதிகளும் புத்தகமாக தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருந்தன.
இதனால், இந்த கல்வியாண்டில் முழுப் பாடப்பகுதிகளையும் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.