Skip to main content

சசிகலா கொடியேற்ற தடை... எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் முறையீடு!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

Sasikala

 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் பிப்.7 ஆம் தேதி சசிகலா வருவார் என தெரிவித்திருந்த நிலையில், பிப்.7 ஆம் தேதிக்குப் பதில் பிப். 8 ஆம் தேதி காலை 9 மணிக்குத் தமிழகம் வருவார் என நேற்று (04.02.2021) டி.டி.வி.தினகரன் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் தமிழகம் வரும் சசிகலா, சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் தோட்டம் அருகே கொடியேற்றத் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அமமுக சார்பில் சசிகலா கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சசிகலா கொடியேற்றுவதற்கான கம்பம் நடுவதற்கும், பேனர்கள் வைப்பதற்கும் தடை விதிக்க கோரி எம்ஜிஆரின் வளர்ப்பு மகள்கள் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்