திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். தினசரி கூலித் தொழிலாளியான இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். பெண் குழந்தையை கோவிந்தராஜ் வளர்ந்து வந்தார்.
தனது மகளை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சமயபுரம் அருகே உள்ள கொனலை ஊராட்சி மலைமாதா பகுதியில் உள்ள தனியார் கிருஸ்தவ பள்ளியில் படிக்க வைத்தார். பள்ளிக்கு சொந்தமான விடுதியிலேயே தங்கி 10 ம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார்.
அப்போது அதே பள்ளியில் 12ம் வகுப்பு படித்த சமயபுரம் மருதூர் கிராமத்தினைச் சேர்ந்த விஜய் என்ற மருதுபாண்டி காதலித்துள்ளார். தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில், மருதுபாண்டிக்கு விமல்குமார், தினேஷ் ஆகிய இருவரும் நண்பர்கள்.
நண்பர்களுக்கு தன் காதலியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் மருதுபாண்டி. இதன் மூலம் பழக்கமான அவர்கள் இந்த பெண்ணுடன் தனிமையில் பழகி இருக்கிறார்கள்.
தாய் இல்லாமல் தினக்கூலி வேலை செய்து வரும் தந்தையோடு அரவணைப்பில் வளர்ந்து வரும் சிறுமி இவர்களுடைய பேச்சில் பலியாகி அனைவருடன் தனிமையில் இருந்திருக்கிறார். இதை பழக்கமாகவே வைத்திருந்திருக்கிறார்.
இந்நிலையில் சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனை வீட்டில் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அதிர்ச்சியாகி உள்ளார். சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதனால் சிறுமியின் தந்தை கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சிறுமியும் அவரது தந்தையும் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், காவல்நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் விசாரணை செய்து, விஜய் என்ற மருதுபாண்டியினை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். மேலும் புகாரில் சம்மந்தப்பட்ட தலைமறைவாக உள்ள அல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விமல்குமார், லால்குடி தினேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ளவர்களை காப்பற்றுவதற்காக அந்த பகுதியில் உள்ள வழக்கறிஞர்கள் சிலர், போலீசாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.