Published on 14/07/2022 | Edited on 14/07/2022

ஓடும் பேருந்தில் ஏற முயன்ற முதியவரை அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கண்மூடித் தனமாகத் தாக்கியுள்ளார்.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் அரசுப் பேருந்தில் முதியவர் ஒருவர் ஓடும்போது ஏற முயற்சி செய்திருக்கிறார். இதில் முதியவருக்கும், அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், முதியவரைக் கண்மூடி தனமாக தாக்கினார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட முதியவர், ராசிபுரம் பேருந்து போக்குவரத்து பணிமனைக்கு சென்று உயரதிகாரிகளைச் சந்தித்து தன்னை தாக்கிய பேருந்து ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.