Skip to main content

144 தடை உத்தரவு அமல்; கும்பலாக கூடினால் நடவடிக்கை! சேலம் ஆட்சியர் எச்சரிக்கை!

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

 


கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தடை உத்தரவு அமலில் உள்ள காலத்தில், கும்பலாக நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரித்துள்ளார்.


சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியுள்ளதாவது: கொரோனா&19 வைரஸ் தொற்று நோய் சேலம் மாவட்டத்தில் பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 144ன் கீழ் சேலம் மாவட்டம் மு-ழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இத்தடை உத்தரவு, இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் வரும் 31ம்  தேதி நள்ளிரவு வரை 7 நாள்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் உத்தரவிடப்படுகிறது. இத்தடைக் காலத்தில், பொதுமக்கள் ஒன்றாக 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடத்தில் கூடுவதும், நடமாடுவதும் தடை செய்யப்படுகிறது. 

 

Salem Collecto





பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வரலாம் என உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசாணை எண். 152ன் கீழ் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை 23.3.2020 ஆணையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 


எனவே இந்த 144 தடை உத்தரவு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வருவதையும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடுவதை, நடமாடுவதையும் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். அரசு மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.


இவ்வாறு ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்