நாம் உண்ணும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுபாட்டினால் குழந்தை குழந்தையின்மை என்கிற பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் குழந்தைகளை விலைகொடுத்து விற்பனை செய்யும் ப்ரோக்கர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது .
இதனால் தமிழக அரசு குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு என்று ஒரு தனி அமைப்பை மாவட்டம் தோறும் ஏற்படுத்தி குழந்தைக் கடத்தலை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் இருந்தாலும் குழந்தை விற்பனையில் லட்சக்கணக்கில் பணம் கிடைப்பதால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் காமராஜர் தெருவை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி அஸ்வினி திருட்டு குழந்தையை வாங்கி வளர்ப்பதாக மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு வந்த புகாரின் அடிப்படையில் பிறந்த விசாரணையில் பிறந்த 3 மாதத்திற்கு முன்பு திருவள்ளூர் பகுதியில் உள்ள புரோக்கர் ஒருவர் மூலம் ஒரு லட்சம் கொடுக்கும் ஆண் குழந்தையை விலைக்கு வாங்கியதாக இதனுடைய உண்மையான பெற்றோர் புவனேஸ்வரி கிருஷ்ணர் என்றும் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு பணத்தை கொடுத்து குழந்தையின் பிறப்பை கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்தனர்.
முறையற்ற முறையில் திருட்டுத்தனமாக குழந்தையை விற்ற அந்த புரோக்கர் தற்போது தலைமறைவாகி விட்டதால் குழந்தை எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதேபோன்று உப்பிலியாபுரம் பகுதியை சார்ந்த திருமணத் தம்பதிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்று விற்பனை செய்திருப்பதாக தகவல் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஒரு இதுகுறித்த விசாரணையில் ....
தர்மராஜ் ராணி தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ராணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். உப்பிலியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவுசெய்து அதை தன் உறவினர்கள் யாரிடமும் சொல்லாமல் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் அரசங்குடி சித்தாள் வேலைக்கு வந்தார்.
இங்கு வேலை செய்த போது ஷீலா என்பவருடன் பழக்கமாகி அவருடன் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கடந்த 25 நாட்களுக்கு முன்பு ராணி பிரசவ வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது பிறந்த நான்காவது நாளில் துறை சார்ந்த தம்பதிகளுக்கு ராணியின் தாய் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டார்.
அதேநேரத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தையின் பெற்றோர் ராணி தர்மராஜ் என்பதற்கு பதிலாக சிவகாமி பாலசுப்ரமணியன் என்று பதிவு செய்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் இதை வைத்து விசாரணையில் இறங்கினர் ஷீலா என்பவர் ராணிக்கு பிறந்த குழந்தையை தனது உறவினர் சிவகாமி பாலசுப்பிரமணியன் தம்பதிக்கு கொடுக்க திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் ராணியின் தாயார் வேறு ஒருவருக்கு குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு பேரம் பேசியதால் கடுப்பான ஷீலா காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால் இந்த குழந்தை விற்பனை விவகாரம் வெளியே வந்தது. இந்த இரு சம்பவங்களும் திருச்சியிலிருந்து இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.