Skip to main content

‘ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய வேண்டும்’ - ஆர்ப்பாட்டம் நடத்திய ஆம் ஆத்மி! 

Published on 03/06/2022 | Edited on 03/06/2022

 

‘Rummy should be banned online’ - Aam Aadmi Party

 

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த விளையாட்டின் மூலம் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. 

 

இந்நிலையில் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அவர்கள், ‘மத்திய அரசு மற்றும் புதுச்சேரி மாநில அரசு, உடனடியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, அண்ணா சிலை அருகில் அரை நிர்வாண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


இதில் அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வலியுறுத்தியும், ஆன்லைன் ரம்மிக்காக நடிகர்கள் விளம்பரங்கள் செய்வதை தவிர்க்கக் கோரியும், மத்திய அரசு மற்றும் புதுச்சேரி மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்