Skip to main content

முரட்டுத்தனமான பிறந்தநாள் கொண்டாட்டம்; சுயநினைவை இழந்த மருத்துவ மாணவர்

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

 Rude Birthday Celebration; An unconscious medical student

 

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சக நண்பர்கள் அடித்து பிடித்து விளையாடியதில் மூளைக்கு செல்லும் நரம்பு அறுந்து மருத்துவம் பயின்று வந்த மாணவர் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வரும் சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னையைச் சேர்ந்த சபீக் அஹமத் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு கடந்த பத்தாம் தேதி பிறந்தநாள் என்ற நிலையில், அவரது நண்பர்கள் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது  சபீக் அஹமத்தை அடித்தும் பிடித்தும் முரட்டுத்தனமாக பிறந்தநாள் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. திடீரென கீழே விழுந்த சபீக் நீண்ட நேரம் ஆகியும் எழவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கழுத்துப் பகுதியிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பு அறுந்தது தெரியவந்தது. மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மாணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் ஆறு பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அடித்து பிடித்து விளையாடிய நான்கு மாணவர்களையும் மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்