கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரிமா சங்கம் மற்றும் சென்னை முக்தி நிறுவனம் இணைந்து 315 கை மற்றும் கால் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு செயற்கை கை மற்றும் கால் பொருத்தும் நிகழ்வை நடத்தினர்.
உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கை மற்றும் கால் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1 கோடி 90 லட்சம் மதிப்பிலான செயற்கை கை மற்றும் கால்களை பொருத்தினர்.
டாக்டர். அப்துல் கலாம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏரோநாட்டிக்கல் அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயார் செய்து இச்செயற்கை கை மற்றும் கால்கள் தயாரிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டதாக அரிமா சங்கம் மற்றும் முக்தி நிறுவனம் ஆகியோர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், அரிமா சங்கத் தலைவர் மோகன், ஆளுநர்கள் என்.ராஜன், பி.அசோக்குமார் சோரடியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.