Skip to main content

மகளை பலாத்காரம் செய்தாரா? மடியில் போட்டு அழுதாரா?  - தந்தையின் தூக்கு தண்டனை ரத்து

Published on 12/06/2018 | Edited on 12/06/2018
seeni

 

ராமேஸ்வரத்தில் 9 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தந்தைக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


ராமேஸ்வரம் கரையூர் பகுதியை சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து(51).இவரது மனைவி தனுஷ்பானு. கடந்த 2013 ஆம் ஆண்டு கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் தனுஷ்பானு, தனது 9 வயது மகளையும்,மகனையும் கரையூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில்  தங்கவைத்திருந்தார். 

 

இந்நிலையில், கடந்த 23.4.2013-ல் மாரிமுத்துவின் 9 வயது மகள் ராமேஸ்வரம் கடற்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக ராமேஸ்வரம் கோவில் போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.

 

பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதன் பின்னர் சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றினர்.

 

இந்நிலையில்  மகளை பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை கடலில் வீசியதாக 3 ஆண்டுக்கு பிறகு மாரிமுத்துவை போலீஸார் கைது செய்தனர்.

 

இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி மாரிமுத்துவுக்கு கடந்த .2017ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

 

பின்னர் கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு உயர் நீதிமன்ற கிளைக்கு அனுப்பப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி ஏ.எம்.பஷீர்அகமது அமர்வு விசாரித்தது.

 

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டார். இவர் வாதிடுகையில்,  சம்பவம் நடைபெற்று 3 ஆண்டுக்கு பிறகே மனுதாரரை கைது செய்து போலீஸார் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். சாட்சிகள் மனுதாரர் கடற்கரையில் தனது மகளை மடியில் போட்டு அழுதுக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். இதை வைத்து அவர் தான் மகளை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறுவது நம்பும்படியாக இல்லை என்றார்.

 

இதையேற்று மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.