காப்பு காட்டு கிராமப்புற சாலையில் தனியாகச் சென்ற வாலிபரை வழிமறித்து சராமரியாக தாக்கி செல்போன் மற்றும் பைக்கை பறித்துக் கொண்டு தப்பி முயன்றபோது அவ்வழியாக சென்ற இரண்டு சமூக ஆர்வலர்கள் துணிச்சலுடன் இரண்டு திருடர்களையும் சுற்றிவளைத்து கொண்டு மாவட்ட எஸ்பி அவர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த highway patrol ரோந்து போலீசார், பிடிபட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று செல்போன் மற்றும் பைக் பறிமுதல் செய்ததற்காக கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பில்லூர் குறுக்குச் சாலையில் இருந்து (RF)காப்புக் காட்டில் கிராமப்புற சாலையின் வழியாக எலவனாசூர்கோட்டை செல்லும் சாலை உள்ளது. இச்சாலையின் வழியாக காப்புக் காட்டில் சாலையோரம் வாலிபர் ஒருவரை இரண்டு நபர்கள் சரமரியாக தாக்கியபோது வாலிபர் ஒருவர் வலிதாங்க முடியாமல் என்னை யாராவது காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சத்தம் கேட்டதும், என்னவோ ஏதோ என்று இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து ஓடியுள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது ஒரு வாலிபரை இரண்டு நபர்கள் கொலைவெறியுடன் தாக்கிக்கொண்டு இருந்ததை பார்த்து பதறிப்போனார்கள். என்ன ஆனாலும் பரவாயில்லை என்று துணிச்சலோடு சமூக ஆர்வலர்களான கருணாநிதி சோழன் மற்றும் இவருடன் சென்ற நண்பரும், அந்த இரண்டு நபர்களையும் சுற்றி வளைத்துக் கொண்டு மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாருக்கு தகவலை தெரிவித்தனர்.
உடனே மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்படி சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலை ரோந்து போலீசார்கள் விரைந்து சென்றனர். அங்கு வாலிபரை தாக்கிய இரண்டு பேரையும் மற்றும் பாதிப்புக்கு உள்ளான வாலிபரையும் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு எடைக்கல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
முதலில் பாதிக்கப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல் மகன் சத்யராஜ் (வயது 30) என்பதும், லாரி ஓட்டுநராக வேலை செய்வதாகவும் இவர் இன்று மாலை மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக காப்புக் காட்டின் சம்பவ நடந்த வழியாக சாலையில் தனியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இரண்டு நபர்கள் தன்னை வழிமறித்து தாக்கி காட்டுக்குள்ளே இழுத்து சென்று சரமாரியாக அடித்து முதலில் மேல் சட்டைப்பையில் இருந்த செல்போனை எடுத்துக் கொண்டு பின்னர் ஓட்டிச் சென்ற பைக்கையும் பிடிங்கினார்காள். ஆனால் பைக்கை விடவில்லை. கொடுரமாக தாக்கும்போது யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று வலி தாங்கமுடியாமல் கத்தி சத்தம்போட்டு அழுதேன் அப்போது தனக்கு யார் என்று தெரியாது இரண்டு நபர்கள் ஓடிவந்து என்னை தாக்கியவர்களிடம் இருந்து மீட்டனர் அதனால் என் உயிர் தப்பியது என்று கூறியுள்ளார்.
வழிமறித்து கத்தியை காட்டி செல்போன் மற்றும் பைக் திருடர்களை போலீசார் விசாரணை செய்ததில் பிடிபட்ட இருவரும் திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேசன் மகன் வீரப்பன் (வயது 29), பழனி மகன் பாஸ்கர் (வயது 21) என்பது தெரியவந்தது
போலீசார் தீவிர விசாரணையில் இவர்கள் இருவரும் லாரி டிரைவர் சத்யராஜை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடியதை போலீசாரிடம் ஒப்புக் கொண்டனர்.
இதனையடுத்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி டிஎஸ்பி பாலசந்தர் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை சர்கள் இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் தலைமை காவலர் எங்கள்துரை மற்றும் போலீசார் செல்போன் மற்றும் பைக் திருட்டு வழக்கு பதிவுசெய்து இவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.