
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் ரேசன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அளவிலான ஹேண்ட்பால் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. அகில இந்திய அளவில் 19 வயதிற்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தேசிய அளவிலான ஹேண்ட்பால் போட்டிகள் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் 26.03.2025 முதல் 30.03.25 வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இதுபோல உத்தரப்பிரதேசம் அலிகர் மாவட்டத்தில் பெண் வீராங்கனைகளுக்கான போட்டிகள்31.03.2025 முதல் 5.4.2025 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் தமிழக அணிக்கான ஹேண்ட்பால் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளுக்கான வீராங்கனைகள் தேர்வு சின்னாளபட்டி பைபாஸ் சாலையில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஹேண்ட்பால் கழகத்தின் மாநிலத் தலைவர் இராமசுப்ரமணியனின் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற வீராங்கனைகள் தேர்வு முகாமிற்கு தமிழ்நாடு ஹேண்ட்பால் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.சிவகுமார் தலைமை தாங்கினார். சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வரும், அறங்காவலருமான என். திலகம் மதுரை மாவட்ட ஹேண்ட்பால் சங்க தலைவர் கண்ணன், சேலம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தேனி மாவட்டச் செயலாளர் விக்னேஷ், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் ராஜா, மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹேண்ட்பால் பயிற்சியாளர்கள் திருவண்ணாமலை சர்மிளா, காஞ்சிபுரம் ஜோசப், பெரம்பலூர் குழந்தைபாக்கியம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஹேண்ட்பால் சங்க ஒருங்கிணைப்பாளர், ஓ.பி.பாரதிராஜா வரவேற்றார் முகாமில் விளையாட்டு வீராங்கனைகள் மத்தியில் பேசிய தமிழ்நாடு ஹேண்ட்பால் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.சிவகுமார், “நான் விளையாட்டுத் துறையில் ஈடுபாடுடன் செயற்பட்டதால் எனக்கு மத்திய அரசு பணியானரயில்வே துறையில் வேலை கிடைத்தது என்னை போல பல மாணவர் ,மாணவியர்கள் அரசு துறையில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே ஹேண்ட் பால் போட்டிக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து வருகிறேன், நீங்கள் போடும் ஒவ்வொரு கோளும் உங்களோடு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் இதை வீராங்கனைகள் உணர்ந்து கொண்டால் போதும் வெற்றி உங்களை எளிதாக தேடிவரும்” என்றார்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறையை பெருமைப்படுத்தும் வகையில் அரசுப்பணியில் மூன்று சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கியதால் இன்று ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் அரசுப் பணிக்கு செல்லும் நிலைமை உருவாகி உள்ளது. இந்திய அளவில் தமிழக விளையாட்டுத்துறை முதல் இடத்தை பெற்றுவருகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் லட்சம் நிறைவேற கடின உழைப்புடன் திறமையாக விளையாடி அரசுப் பணிக்கு செல்ல வேண்டும்" என வாழ்த்தினார்.
32 மாவட்டங்களிலிருந்து சுமார் 120க்கும் மேற்பட்ட ஹேண்ட்பால் விளையாட்டு வீராங்கனைகள் இரு பிரிவினிலும் பங்கேற்றனர். விளையாட்டு வீராங்கனைகள் தேர்வு செய்யும் முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழக ஹேண்ட்பால் விளையாட்டு கழகமும் திண்டுக்கல் மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷனும், சேரன் பள்ளி நிர்வாகமும் சிறப்பாக செய்திருந்தனர்.