Skip to main content

நிராகரிக்கப்பட்ட அமமுக வேட்பாளரின் வேட்புமனு... நிறுத்திவைக்கப்பட்ட வேட்புமனுக்கள்

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

Rejected Candidate's Candidate in ammk ...

 

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. நேற்று (19.03.2021) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை தற்பொழுது தொடங்கியது.

 

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனின் மனு ஏற்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக சார்பில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவரது மனு ஏற்கப்பட்டுள்ளது. காட்பாடியில் போட்டியிடும் திமுக துரைமுருகனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவின் மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி, போடி தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம், அதே போடி தொகுதியில் திமுகவின் தங்கத் தமிழ்செல்வன், கோவில்பட்டியில் அமமுகவின் டிடிவி.தினகரன், திருச்செங்கோட்டில் போட்டியிடும் கொதேமக ஈஸ்வரன், கரூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் விஜயபாஸ்கர், திமுகவின் செந்தில் பாலாஜி, விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திருவண்ணாமலை ஏ.வ.வேலு, கோவையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், தாராபுரம் பாஜக வேட்பாளரும் தமிழக பாஜக தலைவருமான எல்.முருகன், அவரக்குறிச்சி பாஜக அண்ணாமலை ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

 

சைதாப்பேட்டையில் அதிமுக சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமியின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அவர் 8 கோடி ரூபாய் வருமான வரி கட்ட வேண்டிய நிலையில் வருமானவரி நிலுவையில் இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளதாக அந்தத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் புகார் எழுப்பிய நிலையில் அவரது வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராசிபுரம் திமுக வேட்பாளர் மருத்துவர் மதிவேந்தனின் பெயர் நாமக்கல், ராசிபுரம் ஆகிய இரண்டு தொகுதி வாக்காளர் பட்டியலில் இருப்பதால் அவரது வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயலில் போட்டியிடும் பத்மபிரியாவின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்ட தகவல்களில் நம்பகத் தன்மை இல்லை என நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக வேட்பாளர் அப்பாவு மனுவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

 

நெல்லையில் போட்டியிடும் அமமுக பால் கண்ணனின் வேட்புமனுவை முன்மொழிந்து கையெழுத்திட்ட 10 பேரில் 3 பேர் அந்தத் தொகுதி வாக்காளரே இல்லை என்ற புகாரில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்