நடிகர்கள் விஜய், அஜீத், சூர்யா ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து போலியோ சொட்டு மருந்து முகாமை தொடர்ந்து நடத்தக்கோரும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்தனர்.
இந்தியாவில் 1995ம் ஆண்டில் இருந்து போலியோ சொட்டு மருந்து வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவது வழக்கம். ஆனாலும் இன்னமும் இந்தியா போலியோ பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப்படவில்லை. ஆகவே, போலியோ சொட்டு மருந்து முகாம்களை முறையாக நடத்த வேண்டும். அதே நேரத்தில் தொடர்ச்சியாக நடத்த உத்தரவிடவேண்டும் என்று மதுரையைச்சேர்ந்த ஜான்சிராணி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்த போதிய விழுப்புணர்வு ஏற்படவில்லை என்று மனுதாரர் சொன்ன குற்றம் சாட்டை எடுத்துக்கொண்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், நடிகர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்தால் மக்களிடம் எளிதாக சென்றடையும் என்று தாமாக முன்வந்து விஜய், அஜீத், சூர்யாவை இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர்.