
சென்னை செங்கல்பட்டு அருகே ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வரும் இந்த கல்லூரியில் சுஞ்சுராஜ் என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சுஞ்சு ராஜ் அதே கல்லூரியில் பணியாற்றும் சக பெண் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பாட்ட பெண் பேராசிரியர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதனிடையே கல்லூரியில் பணியாற்றும் சக பேராசிரியர்கள் சஞ்சுராஜை தட்டிக்கேட்டுத் தாக்கியுள்ளனர். பெண் பேராசிரியருக்கு சஞ்சுராஜ் பாலியல் தொல்லை கொடுத்த தகவல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தெரியவர, உடனே ஆத்திரமடைந்த மாணவர்கள் சஞ்சுராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு அந்த போலீசாரிடம் பேராசிரியர் சுஞ்சுராஜை மாணவர்கள் ஒப்படைத்தனர். அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரியில் பெண் பேராசிரியருக்கு சக பேராசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.