Skip to main content

நீலகிரிக்கு தொடரும் 'ரெட் அலர்ட்' -மரம் விழுந்து இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
nilgiris

 

 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது நேற்று பலத்தகாற்று வீசியதால் 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாலை மற்றும் வீடுகளின் மீது விழுந்தது. கோக்கால் அருகே இருக்கும் கக்கஞ்ஜி நகர் பகுதியை சேர்ந்த ரவி 52 என்ற தோட்டத்தொழிலாளி நேற்று காலை தோட்டத்துக்கு செல்லும் போது மரம் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்தார். அதேப்போல் பிங்கர்போஸ்ட் ஆர்.சி. காலணியை சேர்ந்த சாதிக் அலி 42 என்பர் மீது மரம் விழுந்ததில் இறந்தார். ஊட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

 

ஊட்டியில் புதுமந்து, தாமஸ் சர்ச், முள்ளிக்கொரை படகு இல்லம், ஸ்டேட் பேங்க் எடக்காடு ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ரவிக்குமார் தலைமையிலான தீயணைப்பு துறையினர் மரங்களை இயந்திரங்கள் மூலம் உடனடியாக அகற்றி அப்புறப்படுத்தினர். எடக்காடு பகுதியில் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ் மற்றும் இரு தீயணைப்புதுறையிரைுக்கு காயம் ஏற்பட்டது.

 

அரக்கோணத்திலிருந்து வந்த 40 தேசிய மீட்பு படையினர் குந்தா, அவலாஞ்சி, கூடலூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் நக்சல் தடுப்பு பிரிவினரும் களத்தில் இறங்கியுள்ளனர். கூடலூர் நகராட்சிக்கு தோட்டமூலா பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டு உள்ளார். அவர் பயிரிட்டுள்ள 2000 நேந்திரன்  வாழைகள் இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக  இருந்தன. இந்நிலையில் தொடர்ந்து பெய்த  கனமழையால், பலத்த காற்று வீசி ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 390 மி.மீ, அப்பர் பவானி 306,  பந்தலூர் 161 மி.மீ, எமரால்டு 145 மி.மீ மழை பதிவாகியிருந்தது.

 

ஏற்கனவே நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்  விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது தொடர் கனமழை காரணமாக இந்த 'ரெட்அலர்ட்' எச்சரிக்கையானது தொடர்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்