தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடுகபட்டி 197 வது வாக்குச்சாவடியில் தேனி பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இவ்வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குபதிவை அழிக்காமல் தொடர்ந்து வாக்கு பதிவு நடை பெற்றதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று பதிவான மொத்தம் ஆண்கள், பெண்கள் உட்பட 1405 வாக்குகள் உள்ள வாக்குச்சாவடியில் 905 வாக்குகளே பதிவாகின. இதனால் 197 வது வாக்குச் சாவடியில் மீண்டும் மறு வாக்குப் பதிவு நடத்திட தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் அறிக்கை அளித்து கேட்டுக் கொண்டதையடுத்து தேர்தல் ஆணையம் பலரிசீலித்து மறு வாக்குப்பதிவு நடத்த உத்திரவிட்டதையடுத்து தொடர்ந்து இந்த வாக்குச் சாவடிக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் மக்கள் வாக்களிக்க வந்து செல்ல வசதியாகவும், அனைவரும் வந்து வாக்களிக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட தேர்தல் அலுவலரும், சட்டமன்ற தேர்தல் அலுவலரும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் பார்வையிட்டு, பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டதைத் தொடர்ந்து தென் மண்டல ஐஜி.சண்முகராகேஸ்வரன் உட்பட நேரில் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று நடைபெறும் 197 வது வாக்குச்சாவடிக்கு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிககும் இயந்திரங்கள் மற்றும் கோளாறு ஏற்பட்டால் உடனே மாற்று இயந்திரமும் பொருத்திக் கொள்ள இயந்திரங்கள் கையிருப்பில் பல்வேறு அரசியல் கட்சியினர் முன்னிலையில் இயந்திரங்கள் சரிபார்க்கப்படுவாக்குச்சாவடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.
வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் காவல் துறையினரிடம், வாக்களிக்க வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட வாக்காளர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடவும். கழிவறை மற்றும் குடிநீர் வசதிக்ள் போன்ற அத்தியாவசிய தேவைகளைச் செய்திடவும், வாக்காளர்களுக்கு வரி காட்டியாக உதவிடவும், கள்ள வாக்கு பதிய மீண்டும் வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற கருத்துரை வழங்கினார்.
பாரபட்சம் காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பேசினார். வடுகபட்டியில் முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 21 இடங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட (இராணுவ வீரர்கள் ) உட்பட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்ட்டுள்ளனர்.
மேலும் வடுகபட்டியில் 197-வது வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் ஆடியோவுடன் கூடிய 13 கண்காணிப்பு கேமராக்கள் , 13 துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மறு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
அதுபோல் ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள பாலசமுத்திரம் கம்மவார் நடுநிலை பள்ளி மற்றும் ஜி.கல்லுப்பட்டி,பிராதுகாரன்பட்டி வாக்கு சாவடிகளில் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருகிறார்கள். இத்தொகுதி திமுக வேட்பாளர் மகாராஜன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாக்கு சாவடிகளை பார்வையிட்டு வாக்கள மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
அதுபோல் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்வும் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் பாலசமுத்திரம் மற்றும் வடுகபட்டி வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தும் வருகின்றனர். அதுபோல் போலீசார் பாதுகாப்பும் பலபடத்தப்பட்டு இருப்பதால் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.